அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதால் கடல் அரிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் அபாயம் எதிர்கொள்ளப்படுவதால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது தொடர்பிலான ஆர்ப்பாட்டம், ‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் – மாபியாக்களை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (27) இடம்பெற்றது.
தம்பட்டடை, தம்பிலுவில் மக்கள் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்திலும், திருக்கோவில் மக்கள் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாகவும், விநாயகபுரம் மக்கள் விநாயகபுரம் பேரூந்து தரிப்பிடம் ஆகிய டூன்று இடங்களில் கூடி மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பேரணியாக வந்,து திருக்கோவில் மணிக்கூட்டுகோபுர சந்தியில் ஒன்றுகூடிய 3,000க்கும் மேற்பட்ட மக்கள், வீதிகளின் இருமருங்கிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் மகஜர் ஒன்றினை, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டோர் கையளித்திருந்ததுடன், திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குச் சென்று, பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.