இலங்கையில் எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளுக்கும் 726 பேரைத் தெரிவு செய்வதற்காக 6 ஆயிரத்து 747 பேர் போட்டியிடவுள்ளனர்.
19 அரசியல் கட்சிகள் மற்றும் 18 சுயேச்சைக் குழுக்களாக இவர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 பேரை தெரிவு செய்வதற்காக 3ஆயிரத்து 376 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
அதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 3 உள்ளூராட்சி சபைகளுக்கும் 66 பேரைத் தெரிவு செய்வதற்காக 638 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி சபைகளுக்கும் 67 பேரைத் தெரிவு செய்வதற்காக 757 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
அதே போல் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கும் 103 பேரைத் தெரிவு செய்வதற்காக ஆயிரத்து 72 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
அதேவேளை மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கும் 88 பேரைத் தெரிவு செய்வதற்காக 904 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்ப்பாணம் மாநாகர சபைக்கு 45 உறுப்பினர்களை தெரிவு செய்ய 232 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு 15 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 143 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
பருத்தித்துறை நகர சபைக்கு 15 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 144 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
சாவகச்சேரி நகர சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 189 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
காரைநகர் பிரதேச சபைக்கு 10 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 104 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 96 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
வேலனை பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 184 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு 25 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 252 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு 35 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 227 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 217 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு 30 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 230 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 272 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கு 31 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 238 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 160 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 279 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
நல்லுார் பிரதேச சபைக் கு20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 207 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம்
கரைச்சி பிரதேச சபைக்கு 35 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 342 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
பூநகரி பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 168 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
பச்சிலை பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 128 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம்
மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 128 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
துணுக்காய் பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 112 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 229 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 228 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வவுனியா மாவட்டம்
வவுனியா நகர சபைக்கு சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 228 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 164 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 234 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 313 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 133 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மன்னார் மாவட்டம்
மன்னார் நகர சபைக்கு 15 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 162 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 184 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 152 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 190 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 216 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தெரிவத்தாட்சி அலுவலகங்களின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.