கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் 28 ம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து மீதமுள்ள 100 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளும் விடுவிக்கும்வரை போராட்டம் தொடருமென இன்று (30) 305 ஆவது நாளாகவும்போ ராடிவருகின்றனர்
கேப்பாபுலவினை சொந்த இடமாக கொண்ட கி.புஸ்பராணி கருத்து தெரிவிக்கும் போது கேப்பாபுலவில் ஒருபகுதி காணிகள் விடுபட்டுள்ளன ஆனால் கடற்கரைப்பக்கம் விடவில்லை அந்த இடத்தினை சேர்ந்த நான் இதனை தெரிவிக்கின்றேன் ஒருபக்கம் குடியேற்றி மறுபக்கம் குடியேற்றாமல் விட்டால் இது ஒரு பாரபட்சமான வேலை இராணுவத்திற்கு கூடி மனச்சாட்சி துன்புறுத்தவில்லையோ நாங்களும் மக்கள்தான் கடந்த 10 மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் இருந்து எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் நாங்கள் எங்கள் சொந்த இடத்திற்கு போவோம் என்று
ஆனால் எங்கள் இடம் விடப்படவிpல்லை எங்களை வீதியிலே இருங்கோ என்று கைவிட்டுவிட்டார்கள் இன்றும் கண்ணீருடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் இருக்கின்றோம் கேப்பாபுலவு ஒரு சிறிய கிராமம் அந்த கிராமத்திலும் இரண்டாக பிரித்து ஒருபகுதியினை அனுப்பி ஒருபகுதியினை இருந்து அளவைத்து பார்கின்றார்கள் இது நல்லதாக தெரியவில்லை இந்த காணி விடுவிப்பு என்று சொல்விட்டு எங்களுடைய காணிகளை விடுவிக்காமல் இருப்பதால் நாங்கள் கண்ணீருடன்தான் இன்றும் இருக்கின்றோம்
எங்களால் எங்கள் குடும்ப வறுமையினை தாங்கமுடியவில்லை இனி எங்களுக்கு விசராக்கும் மன நிலை பாதிக்கும் அளவிற்கு நடந்துள்ளார்கள் .
காணிவிடுவிப்பு நடந்த மேடையில் எங்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை இன்னும் விடுவிக்காத காணிகளை விடுவிப்போம் என்ற ஒரு வார்தை கூட சொல்லவில்லை கடற்கரை பக்கம் தான் எங்களின் காணிகள் இன்றும் படையினரின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளது அதைபற்றிகூட ஒருகதை சொல்லவில்லை
எங்கள் பகத்தில் கோவில் இருக்கின்றது பாடசாலை இருக்கின்றது பொது மண்டபம் இருக்கின்றது இந்த பக்கத்தில்தான் என்னுடைய நான்கு ஏக்கர் காணி இருக்கின்றது. அதில் முழுக்க தென்னம்பிள்ளைகள் வைத்து வளர்த்தேன் இன்று நாங்கள் தேங்காய் இல்லாமல் சமைச்சு சாப்பிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இன்னிலையில் இந்த போராட்டத்தை நாங்கள் கைவிடப்போவதில்லை இதில் இருந்து செத்தாலும் எங்களின் சொந்த இடத்திற்கு நாங்கள் போகவேண்டும் என்பதை உறுதியாக சொல்லி நிக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஒருவர் இன்று கேப்பாபுலவில் 304 நாளாக போராடிக்கொண்டிருக்கின்றோம் எல்லா மக்களையும் விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடினோம் ஆனால் ஒருபகுதி மக்கள் காணிகளைத்தான் விட்டுள்ளார்கள் அது சந்தோசமான விடயம் தான் ஆனால் எல்லாரையும் ஒருமிக்க விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடினோம் இன்று அவர்கள் தங்கள் காணிகளை பார்வையிட்டு வருகின்றார்கள் ஆனால் நாங்கள் கவலையுடன் கண்ணீருமாக இருக்கின்றோம் ஆனால் எங்களுக்கு சரியான கஸ்ரம் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு கஸ்ரப்படுகின்றார்கள் எங்களையும் எங்கள் சொந்த இடத்திற்கு விடவேண்டும் விடும் வரையும் நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று உறுதியா சொல்லி நிக்கின்றோம் என்றார்
இந்நிலையில் குறித்த மக்களை நேற்று(29) சந்தித்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
கேப்பாபுலவு மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்காக 303 நாட்களாக தங்கள் வாழ்இடங்களை விடுவிக்க போராடி வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி 111 ஏக்கர் காணிகளை உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது இந்த காணிகள் உதவி அரசாங்க அதிபரினால் எதிர்வருமத் 01 ஆம் திகதி மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 100 குடும்பங்களில் 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது 303 நாட்கள் இந்த மக்கள் போராடியது என்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த மக்களை 303 நாட்கள் இந்த அரசாங்கம் படைமுகாம் வாசலில் இருக்கவிட்டது என்து அரசின் மெத்தனப்போக்கு மீண்டும் 181 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு கால அவகாசம் கோரிய பாதுகாப்பு அமைச்சு இப்பொழுது அதில் ஒரு பகுதி விடமுடியாது என்ற கூற்றையும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது கேப்பாபுலவினை பொறுத்தவரையில் அரச காணிகள்பெருமளவாக இருக்கின்ற பொழுது மக்களின் வாழ்விடங்களை ஏன் இந்த இராணுவம் இன்னும மறித்து வைத்திக்கொண்டிருக்கின்றது என்பது புரியவில்லை எனவே அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு அரச அதிகாரிகள் எல்லோரும் உடன்பட்டு இந்த மக்களுக்கான நிலங்களை உடன் விடுவிக்கவேண்டும் மீண்டும் மீண்டு மக்களை வீதியில் போராட தள்ளிவிட்டிருப்பது என்பது அரசாங்கத்தின் கண்டுகொள்ளா போக்கினை எடுத்து காட்டுகின்றது எனவே அரசு மக்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கவேண்டும் காலங்களை இழுத்தடித்து மக்களை வீதிகளில் இறங்க விடுவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது
மீண்டும் பல்வேறு இடங்களில் பார்க்கின்ற பொழுது அரசு தமிழ்மக்களுக்கு எதிராக செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது அண்மையில் யாழில் நாகவிகாரை துறவி அவர்கள் இறந்த பொழுது முத்தவெளியில் அவரது உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது இதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை தமிழ்மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது எனவே இந்த பகுதிகளில் படையினரின் ஆட்சிதான் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது என படையினரின் இந்த இடங்களில் தலையீடுகளை தவிர்த்து அரசாங்கம் தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டிய தீர்வுகளை வழங்கவேண்டும் தொடர்ச்சியாக காலங்களை இழுத்தடித்து கொண்டிருந்தால் தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்து சர்வதேசத்திடம் கோருகின்ற நிலமைதான் இங்கு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.