மலர்கின்ற புத்தாண்டு முதல் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குள்ள போட்டி போட்டு தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மலரவிருக்கின்ற புத்தாண்டை முன்னிட்டு ஊடகங்களுக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
புதிதாக மலரும் 2018ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் அமைதியையும், சமாதானத்தையும் வழங்குகின்ற ஒரு புதிய ஆண்டாக மிளிர வேண்டும். என வாழ்த்துகின்றேன். எம்முடமிருந்து விடைபெறும் 2017ஆம் ஆண்டை அன்புடன் வழியனுப்பி 2018ஆம் ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம்.
இப் புதிய ஆண்டிலே எம்மிடையே காணப்படுகின்ற விரோத உணர்வுகள் அனைத்தும் கலகல கடவதாக ! எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்ப்பார்களாக ! எமது மக்களின் சுகவாழ்வுக்கும், நிலைப்பேறான அரசியல் அந்தஸ்துக்குமாக யாவரும் ஒன்றிணைந்து பாடுபட இப் புத்தாண்டு வழிவகுப்பதாக! 2018ஆம் ஆண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் சுக வாழ்வையும் மன அமைதியையும் வழங்குகின்ற புதிய ஆண்டாகத் திகழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.