புதிய வெ ளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு துறைசார்ந்த இலவச பயிற்சிப் பட்டறைகள் இம்மாதம் முதல் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம செயற்பாட்டாளராக பங்குகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளார்.
இப்பயிற்சிப் பட்டறைகள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கானதும் ஆசிரியர்களுக்கானதும் விவசாயிகளுக்கான இயற்கை விஞ்ஞானம் பற்றியதுமான பயிற்சிப் பட்டறைகளாக அவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாணம் புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்திலும் , கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்திலும் மற்றும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையிலும் இன்று முதல் 4 ஆம் திகதிவரை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளன.
இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிப் பட்டறைகள் இம் மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை யாழ்ப்பாணம் கச்சேரி மாநாட்டு மண்டபத்திலும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், விவசாயிகளுக்கான இயற்கை விவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை இம்மாதம் மாதம் 4 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை காலை 9 மணிமுதல் மாலை 4.30 மணிவரை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்திலும் தெல்லிப்பழை மானிடம் விவசாயப் பண்ணையிலும் இடம்பெறவுள்ளது.
மேலும் இம்மாதம் 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை கிளிநொச்சி யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடமண்டபத்திலும் கனகராயன்குள விவசாய பீடப் பண்ணையிலும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இம்மாதம் 10 ஆம் திகதி காலை 9 மணிக்கு மன்னார் தட்சணாமருதமடு மகா வித்தியாலயத்திலும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மல்லாவி சிவன் ஆலயத்திலும் அதேதினம் காலை வவுனியா மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளது.
எனவே இவ் இலவச பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பயிற்சி இணைப்பாளர், கு.வசீகரன் , 077 3788795, என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.