வசந்தம் TV யில் ஒலிபரப்பாகிய அதிர்வு நிகழ்வில் சுமந்திரன் அவர்களும் கஜேந்திரகுமார் அவர்களும் பங்குபற்றினார்கள். உண்மையில் சிறந்த விவாதம் அது. தமிழ் மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். பார்த்தால் தான் உண்மையாக யார் ஏமாற்ற பேசுகிறார்கள் என்பதை அறியலாம்.
இங்கு நான் சுமந்திரனை குறை கூற போவதில்லை. அவர் தனது பணிகள் மூலம் யாருக்கு விசுவாசம் காட்டுகிறார் என்பதை நீங்களே பார்த்து அறிய நல்ல சந்தர்ப்பம். விவாதத்தில் பங்குபற்றிய சுமந்திரன் இறுக்கமானவராக காணப்படவில்லை. அவரில் ஒரு விட்டுக்கொடுப்பு இருந்தது. கஜேந்திரகுமாருடன் பல வழிகளில் இணங்கி போனார். சிலவற்றை ஆம் என்றார். ஒரு விட்டு கொடுக்கும் சிரிப்போடு காணப்பட்டார். பல நாட்கள் பார்த்த சுமந்திரன் நேற்று இல்லை. சனி மாற்றம் சுமந்திரனையும் விட்டு வைக்கவில்லை போல. பொய்களை அள்ளி கொட்டுவதையும் தனது உறுதியாக பேசும் தன்மையையும் விட்டுவிட்டார். மாகாணத்திற்கு அதிகாரம் கொடுத்தால் திரும்ப பெறமுடியாது என கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருந்தார். இருப்பினும் #ஏக்கியரஜ என்பது சமஸ்டிதான் என்பதை மட்டும் விட்டு கொடுக்க தயாராக இல்லை. அதையும் விட்டார் என்றால் அவராகவே கஜேந்திரகுமாரை கட்சிக்கு கூப்பிடுவார் என்பது போலவே எனக்கு அவரின் சிரிப்புக்கள் இருந்து ஆமோதித்தன.
சட்டத்தரணி தொழில் என்பது #கொலை செய்தவனை #இல்லை என்பதும் #குற்றம் #புரியாதவனை குற்றவாளி என வாதிடுவதுமே அத்துடன் குறுக்கிட்டு பேசுவதும் அவர்கள் மரபு.
கஜேந்திரகுமாரின் விளக்கம் மிகமிக சரியானது. தமிழ் மக்கள் பேரவை தனது நிலைப்பாட்டை/ எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார். சுமந்திரனும் அமோதித்தார். இடைக்கால அறிக்கையிலையே பல விடயங்கள் சேர்க்கப்படவில்லை. சேர்த்தால் தானே விவாதங்களில் திருத்தத்திற்கு உட்படும் என்பதை சுட்டிக்காட்டினார். இது மிகப்பெரிய தவறு ஒன்று இடைக்கால அறிக்கையில் உள்ளதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதைவிட இதை நிராகரிக்க வேறு காரணங்கள் தேவையில்லை. ஜயம்பதி விக்கிரமரத்னவின் அம்மாவுக்காகத்தான் ஏக்கியரஜ பாவிக்கப்பட்டது என்பதையும் ஒப்புக்கொண்டார். கஜேந்திரகுமாரின் கலப்பு பொறிமுறை கதை சுமந்திரனுக்கு பிடித்துப்போயிருந்தது.
சுமந்திரனுக்கும் நெஞ்சைத் தொடும்படியாக ஒரு விடயத்தை சொன்னார் கஜேந்திரகுமார். ஏன் நீங்கள் வார்த்தை விளையாட்டு செய்வான்? சிங்களவன் இதைத்தான் தாறான் இது #ஒற்றையாட்சிதான் இதைதான் மக்களே எம்மால் பெற முடியும் என மக்களுக்கு உண்மையை சொல்லுங்கோவன் என்ற போது சுமந்திரன் மட்டுமல்ல அறிவிப்பாளர்களும் ஏற்றுக்கொண்டது விளங்கியது. அறிவிப்பாளர்கள் கஜேந்திரகுமார் சாதாரணமாக பேசுபவர் என நினைத்து அவரையே குறிவைத்தனர் ஆனால் கஜேந்திரகுமாரின் பதில்கள் அவர்களை மெளனமாக்கியதே உண்மை.
கஜேந்திரகுமார் இடைக்கால அறிக்கையில் இருக்கும் ஓட்டையை மிகவும் கட்சிதமாக எடுத்து விவாதித்தார். அந்த முக்கிய சொற்களின் பொருளை உணர்த்தினார். சட்ட ஏற்பாடுகளில் சொற்களுக்கான முக்கியத்துவம் கட்டாயமானது. இறைமை பற்றிய கருத்து சிறப்பு! உண்மையில் சுமந்திரனும் கஜேந்திரகுமாருக்கும் இன்னுமொரு திறந்த விவாத மேடை தேவை. மக்கள் விழிப்படைய வேண்டும். சுமந்திரன் வரமாட்டார் என்றே நினைக்கிறேன். அப்படி வந்தால் கஜேந்திரகுமார் சொல்வது பொய் என வாதிட முடியாமல் சுமந்திரன் ஏற்றுக்கொள்ள வேண்டி வரலாம்.
கஜேந்திரகுமாரை பிடிக்கவில்லை என்பது அரசியல் ரீதியாக இருக்கலாம் ஆனால் அரசியல் யாப்புக்காக இருந்தால் அது தமிழர்களின் துரதிஸ்டமாகவே அமையும். ஒரு தமிழனாக கஜேந்திரகுமாரின் கேள்விகள் தரமானவை. சந்தேகங்களை உருவாக்கும் ஒரு அரசியல் யாப்பு எமக்கு தேவையற்றது. சர்வதேச நெருக்குதலின் அடிப்படையிலையே இந்த யாப்பு வெளிவருகிறது. இந்த யாப்பை தமிழர்களின் விருப்புடனே கொண்டுவரப்பட்டது என்பதை காட்டவே தமிழ் அரசு கட்சி ஊடாக சிங்கள பேரினவாதம் காய் நகர்த்துகின்றது. அவ்வளவுதான். எனது அம்மா சொன்னது போலவே 5 வயது பிள்ளைக்கும் சிங்களவன் ஏமாற்றுகிறான் என தெரியும். இப்படியிருக்க சிங்களவனின் இடைக்கால அறிக்கைக்கு பரிந்து பேசுபவர்களின் தேவை என்னவோ?
சிங்களவர்களுக்காக பாடுபட்டு பரிந்துரைத்து பேசும் . சுமந்திரன் தமிழ் மக்களுக்காக பேசியிருந்தால் தமிழர்களின் நிலை வேறாக இருந்திருக்கும். சாபவிமோசனம் பெற தமிழர்களை யார் தொடவேண்டுமோ???