கூகுள் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிவியல்ரீதியான நடாத்திய கருத்துக் கணிப்பில் இதில் இந்தியமொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் தமிழ் மொழியேபயன்படுத்தப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியமொழிகளில் தமிழர்கள் கிந்தி மொழி பேசுபவர்களை விட எட்டுமடங்கு எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர் என்றும் இருந்தும்இணைய தளத்தை தாய் மொழியில் பயன்படுத்துவதில் வடஇந்தியர்களை விட அதிக அளவில் தமிழர்கள் பயன்படுத்திவருகின்றார்கள என்றும் இனி வரும் காலங்களில் தமிழ்மொழியின் பயன்பாடு இணையத்தில் கிந்தியை விட அதிகரிக்கும்என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. கிந்தி தான் ஆட்சிமொழி. இருந்தும் தமிழ் மொழி இணைய பயன்பாட்டில் முதல்இடத்தில் இருக்கக் காரணம் தமிழ் மொழி தமிழகத்தை தாண்டி பிறநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்டநாடுகளில் ஆட்சி மொழியாகவும் மலேசியா, மியன்மார் ,மொரீசியஸ் போன்ற நாடுகளில் கணிசமாகவும் பேசப்படுகிறதுகற்பிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அமெரிக்காமற்றும் மேற்கத்திய நாடுகளில் வளர்த்து வருகின்றனர்.இவையெல்லாம் தமிழ் மொழியை முன்னுக்கு கொண்டு செல்லஉதவுகின்றது.
தமிழகத்தில் தற்போது தான் தமிழ் குறித்த விழிப்புணர்வு பெருகிவருகிறது . அதனால் வரக்கூடிய நாட்களில் இணையத்தில் தமிழ்மொழியின் ஆதிக்கம் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை .தொடர்ச்சியாக நாம் எல்லா துறைகளிலும் தமிழ் மொழியின்பயன்பாட்டை அதிகரித்தால் நிச்சயம் உலக நாடுகளும் இந்தியஅரசும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கும்என்பதிலும் ஐயமில்லை. என உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்பமன்றம் (உத்தமம்) கருத்து வெளியிட்டுள்ளது.