யாழ் மண்ணில் இருந்து “யாழ் களரி” எனும் மாதாந்த பத்திரிகை வெளியீட்டு விழா 1.1.2018 காலை 9.30 மணிக்கு யாழ் கோட்டை முனியப்பர் கோவில் முன்றலில் சிறப்புற நடைபெற்றது. ராகஸ்வரம் கலை மன்றம் பல்சமய கருத்தாடல் நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் காந்தள் புலம்பெயர் இளையோர்களின் அனுசரணையில் வெளியிடப்பட்ட யாழ் களரியின் முதல் பிரதியை எழுத்தாளர் செ.யோசப்பாலா பெற்றுக்கொண்டார்.
யாழ் ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் மற்றும் பேராசினியர் நீ.மரியசேவியர் அடிகள் மற்றும் நாகவிகாராதிபதி ஸ்ரீ விமலதேரர், முனியப்டர் தேவஸ்தான ஞானசேசர சர்மா ,அருட்கலாரிதி வின்சன் பற்றிக் அடிகள் உட்பட பலர் சிறப்புப்பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
ஜோர்ச் ஜெஸ்ரின் மற்றும் சஞ்சீவதனுசன் ஆகியோரை ஆசிரியர்டளாக கொண்டு மாதாந்தம் வெளிவரும் யாழ் களரி பத்திரிகைக்கு பின்வரும் மின் முகவரிக்கு ஆக்கங்களை அனுப்பலாம் [email protected] புலம்பெயர் இளையோருகள் மற்றும் வடகிழக்கு இளையோர்கள் ஒன்றினைந்து தமிழர் தரப்பின் சுபீட்சத்திற்காக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர் அந்தவகையில் காந்தள் புலம் பெயர் இளையோர்கள் சார்பில் பொறுப்பாசிரியர் வே.சஞ்சீவதனுசன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளார் தினச்செய்தியாக www.yarlgallery.com வெளிரவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.