சம்பந்தன் ஐயாவின் பின்னால் வால்பிடித்து திரிவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தன்மீது சுமத்தப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கநாதன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை சுமந்திரன் நேர்மையானவர் என்றும் பொய் பேசாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.