அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இது தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளிக்கையில் விளக்கமளித்தனர்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இருவரும்இ
அமெரிக்கா இந்த ஜிஎஸ்பி சலுகையை 9 நாடுகளுக்கு வழங்கிவருகின்றன. இதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒன்றல்ல. இடைக்கிடையே அமெரிக்காவினால் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை. இருப்பினும் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவின் சலுகை ஆடைத்தொழிற்சாலைக்கு மாத்திரமே கிடைக்கப்பெற்றது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 2.8பில்லியன் பெறுமதியான ஏற்றுமதிப்பொருட்களில் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மாத்திரமே ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்கப்பெறுகின்றது. இது ஒரு சதவீத பங்காகும். இது எமக்கு பெரும் பாதிப்பு அல்ல.
இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கப்பெறும் ஜிஎஸ்பி சலுகை தொடர்ந்தும் எமக்கு கிடைத்து வருகின்றது என்றும் குறிப்பிட்டனர்.