வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இம் மாதம் 9 ஆம் திகதி தொடரவுள்ள வடமாகாணசபை அமர்வுகளை முடக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடாத்தவுள்ளோம்போராட் டக் களத்தை வடமாகாண சபை வளாகத்தில் மாற்றவுள்ளோம்
வடமாகாண சபையை முற்றுகையிட்டு எமது போராட்டம் தொடரும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வடக்கிலும் கிழக்கிலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் வடக்கில் பல்வேறு இடங்களிலும் எமது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெயிலிலும் காலநிலை மாற்றத்தின் கொடூரத்திலும் நோய் நொடிகள் மட்டுமன்றி பலர் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடரும் இப் போராட்டங்களுக்கு வடமாகாண சபையோ மக்கள் பிரதிநிதிகள் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்களோ எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை. எல்லோரும் தமது அரசியல் பிழைப்புக்காக முகத்தை காட்டி விட்டு செல்கின்றனரே தவிர உருப்படியான காரியம் எதுவும் செய்ய துணியவில்லை.
இந்த நிலையில் தான் வேலையற்ற பட்டதாரிகளாகிய எமது நிலைமையும் உள்ளது. வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் அவைத் தலைவர் என்று பலரையும் சந்தித்தோம் அவைத்தலைவர் எம்மை அவமானப்படுத்தி அனுப்பினாரே தவிர எமக்கான மனிதத்துவமான அனுகுமுறையை வழிகாட்டலை அவர்கள் கையாளவில்லை. அவரது வீட்டில் பெண்ணெடுக்க போனது போன்றும் , அவரது சொத்துக்களை நாம் சூறையாடப் போனது போன்றும் எம்மை மிக்க கேவலமாக அவமதித்துள்ளார். எங்களுக்கு வேலை செய்ய தெரியும் வெளிய போ என்று வார்த்தைகளை எம் மீது பிரயோகித்து உள்ளார். . நாங்கள் நல்ல பதிலுக்காக யாவற்றுக்கும் பொறுமை காத்து வந்தோம் .
வடமாகாண ஆளுநர் அனுமதிக்கப்பட்டுள்ள தொகையின் பிரகாரமே நியமனங்கள் வழங்கப்படும் எனக்கூறியுள்ளார். அதிலும 300 க்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டு அனுமதி பெறப்பட்ட பணி நிலைகளுக்குரிய நிலையில் உள்ளனர்.
மீதம் 800 க்குட்பட்ட பட்ட தாரிகளுக்கு தான் நியமனம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. அதுவும் நியமன பணிக்கு ஏற்ப அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டே நியமிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகின்றது.
வடக்கில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுள் 800 பேருக்கு மட்டுமே பட்டம் பெற்ற மூப்பு ஆண்டுகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஏனையவர்கள் இது நாள் வரையும் போராடியும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.
எனவே எமது பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் அனைவருக்கும் சரியான தீர்வு கிடைக்க கோரி வடமாகாணசபை அமர்வினை ஸ்தம்பிக்கும் வகையில் முற்றுகைப் போராட்டத்தினை நடாத்தஉள்ளோம்
. எல்லாரும் எம்மையும் ஏமாற்றுகின்றனர். ஆளுநரிடம் ஜனதிபதியை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளோம் முதலமைச்சர் கவர்ணர் மாகாணசபை எல்லோரையும் சந்தித்தோம் எல்லோரும் அலட்சியம் செய்துள்ளனர்.
இன்று 68 நாட்கள் எல்லாத்தையும இழந்து போராட்டத்தில் நிற்கேக்க எந்த அனுகுமுறையில் எம்முடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
எங்கட கோரிக்கைகளை அவர்கள் செயற்பட முடியாதவர்களாக உள்ளனர்.
. எனவே நாம் 9 ஆம் திகதி செவ்வாய் அமர்வை வடக்கின் 5 மாவட்டமும் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு முற்றுகை செய்யப்போகின்றோம். இனி எங்கட போராட்டக் கொட்டகை வடமாகாண சபையில் தான் செயற்படும் . ஒருவர் போராடும் நிலை ஏற்பட்டாலும் எமது போராடடம் தொடரும் என்றனர்.