ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றுள்ளதாகவும் ‘திருடனிடம் பிச்சை எடுத்த கேவலம் எங்காவது நடந்ததுண்டா’ என்றும் நடிகர் கமல் தெரிவித்திருந்தார்.
இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கோவை கணபதி மணியகாரன்பாளையத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர் இளங்கோவன்இ கோவை ஜே.எம்:2 நீதிமன்றில் நடிகர் கமல் மீது நேற்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்இ நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் கமல் மீது விசாரணை நடத்தி தண்டனை அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இம்மனு மீதான விசாரணையை ஜன. 12க்கு மாஜிஸ்திரேட் ராஜ்குமார் ஒத்திவைத்தார்