‘முன்னொரு காலத்தில் மனித உரிமைகள் குறித்த கடும் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை முகங்கொடுத்து வந்தது. அதேவேளைஇ சிறந்த அரசு ஒன்றுக்கான தேவையும் மிகக் கடுமையாக உணரப்பட்டு வந்தது. தற்போதைய நல்லாட்சி அரசின் பதவியேற்புடன் அந்தக் கரும்புள்ளி துடைக்கப்பட்டிருக்கிறது.
மனித உரிமைகளைக் காக்கும் ஒரு நாடாக இலங்கை மிளிர்வதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் சம்மேளனத்துக்கு விஜயம் செய்த அவர்இ அங்கு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
‘சில நாட்களுக்கு முன் சர்வதேச நாடுகளின் பங்கேற்புடன் மனித உரிமைகள் குறித்த மாநாடு நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது. பல ஆசிய நாடுகள் பங்கேற்கவிருந்த இந்த மாநாட்டை நடத்தும் கௌரவம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது. காரணம்இ இலங்கையில் இன்று மனித உரிமைகள் பேணப்பட்டு வருவதே.
‘நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது வெளிநாட்டு விஜயங்களின்போதுஇ சிறந்த ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பியிருப்பது போன்ற அம்சங்கள் குறித்து பாராட்டுப் பெற்று வருகின்றனர். இது இந்த நல்லாட்சியின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.’ என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.