அரசமைப்புச் சபையிலிருந்து விஜயதாச ராஜபக்சவை நீக்கும் முடிவை ரணில்எ டுத்திருந்தார். இதைப் பகிரங்கமாக அறிவிப்பதற்கிடையில் விஜயதாச தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயதாசவின் இடத்துக்குப் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேராஇ ஜயம்பதி விக்கிரமரத்ன உள்ளிட்டவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைப் பட்டியலில் அஜித் பி. பெரேராவின் பெயரே முன்னிலையில் இருக்கின்றது எனத் தெரியவருகின்றது.
உயர் பதவி நியமனங்களை அங்கீகரிப்பதற்குரிய அரசமைப்புச் சபையில் முன்னர் 7 உறுப்பினர்களே அங்கம் வகித்தனர். பின்னர் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அந்த எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்பட்டது.
இதன்படி சபாநாயகர்இ பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி அடிப்படையில் இதற்குத் தெரிவாவார்கள். இது தவிரஇ அரச தலைவரின் பிரதிநிதிஇ தலைமை அமைச்சரின் பிரதிநிதிஇ எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதிஇ சிறுகட்சிகளின் பிரதிநிதி என்று 4 பேர் தெரிவாவார்கள். அதன்பின்னர் சிவில் அமைப்புகளின் சார்பில் மூவர் தெரிவுசெய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.