வொசிங்டனில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில்இ தூதரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 132இ000 டொலர் நிதியைப் பயன்படுத்திஇ அமெரிக்காவில் சொத்து ஒன்றை வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்இ ஜாலிய விக்கிரமசூரிய கைது செய்யப்பட்டு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை அனுமதி பெற்று விடுதலையான அவர்இ மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு மாத விடுமுறை பெற்று அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது ஜாலிய விக்கிரமசூரிய நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்காக பிணைக் கையெழுத்திட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இந்த நிலையிலேயே அவரைக் கைது செய்ய கோட்டே நீதிவான் நேற்று பகிரங்க பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.