பொது மக்கள் வங்கி கடன்களுக்கு அதிகளவான வட்டி செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியது பிணைமுறி மோசடியின் விளைவுதான். ஆட்சிக்கு வந்தமர்ந்து அமைச்சர்களை நியமிக்க முன் மத்திய வங்கி ஆளுநரை நியமிக்கும் அளவுக்குஇ ஆட்சிக் கதிரைக்கு வரமுன்னரே மோசடிகளுக்கு சகல வழிவகைகளையும் செய்துவிட்டுதான் வந்துள்ளனர்.
இலங்கைக் குடிமகன் இல்லாத ஒருவரை தலைமை அமைச்சர் ரணில் அரச உயர் பதவியில் அமர்த்த முன்வருகையில் அதன் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் செயற்பட்ட அரச தலைவர் மைத்திரியும் இந்த மோசடிக்கு துணைப்போன வரே. நிதியமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டிய மத்திய வங்கி தலைமை அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதும் கொள்ளையடிப்பதற்கான வழிவகைகளை இலகுபடுத்தவே.
அரச தலைவர் மைத்திரியின் வாள் வீச்சானது குற்றவாளி களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக எம்மால் கருத இயலாது. குறைந்த பட்சம் ஒரு குற்றவாளியாக சித்திரிக் கப்பட்டிருப்பவர்களின் கடவுச் சீட்டுகளை கூட அரசால் நிறுத்த முடியாது போயுள்ளது.
சிறந்த ஆளுமைகளை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி தற்போதுள்ள நிலையில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகளே. நேர்மையான தலைமை அமைச்சர் எனில் அவரே பதவி விலக வேண்டும் அல்லது அரச தலைவரால் பதவி விலக்கப்படல் வேண்டும் என்றார்.