பயன்பாட்டில் உள்ள நாணயங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகஇ இலங்கை மத்தியவங்கி அறிவித்தல் விடுத்துள்ளது. அதேவேளை சில்லறை நாணயங்களுக்கான உலோகத்தை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்மூலம்இ தயாரிப்பு செலவினை குறைக்க முடியும் எனஇ இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சில்லறை நாணயங்களின் தேவை அதிகரித்துள்ளமையினால்இ அதன் தயாரிப்பினை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்இ கடந்த டிசம்பர் மாதம்இ இலங்கையில் புழக்கத்திலிருக்கும் நாணயத்தாள்களை சேதப்படுத்துதல்இ அதில் மாற்றங்களை செய்தல்இ மற்றும் சிதைத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துஇ இவ்வாண்டு ஏப்ரல் 01ம் திகதி முதல்இ இலங்கையின் நாணயத்தாள்கள் பழுதடைந்திருந்தால் வங்கிகளிலும் வர்த்தக நிலையங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும்இ பழையஇ உருமாற்றப்பட்டஇ பழுதடைந்தஇ ஏதாவது எழுதப்பட்ட நாணயத்தாள்கள் இருப்பின்இ அவற்றை வங்கிகளில் கொடுத்து புதிய தாள்களை பெற்றுக் கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கிஇ பொதுமக்களை வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.