பெரும் சிரமங்களின் மத்தியில் மைத்திரிஇ ரணில் நல்லாட்சி அரசாங்கத்தைக் பதவிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பாரிய நிதிமோடி இடம்பெற்றுள்ளதாக உதவி வழக்கும் நாடுகள் கூறியதாக முத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
பிணைமுறி ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையைஇ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுஇ குற்றவாளிகள் நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்கப்படுவர் என கூறியதை உதவி வழங்கும் நாடுகள் வரவேற்றுள்ளன.
ஆனால் இலங்கை அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள் இவ்வாறு பாரிய நிதி மோசடியில் ஈடுபடுவதால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்பு கொண்ட பிரதிநிதிகள்இ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான பாரிய நிதிமோசடிகள் அதுவும் மக்களுக்கான நிதிகள் மோசடி செய்யப்படுமானால் நிதியுதவிகளை எதிர்பார்க்க முடியாது என்ற தொணியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆட்சியமைத்து ஒரு வருடத்தில் ஆயிரத்தி 145 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல அனைத்து அரசியல் தலைவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் கொழும்பில் உலக வங்கியின் பிரதிநிதி கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலம் தாமதிக்காமல் மோசடி செய்யப்பட்ட நிதிஇ இலங்கை மத்திய வங்கிக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இல்லையேல் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிதிகள்இ இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இல்லையெனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுஇ நிதிமன்ற விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசாங்கத்தின் சார்ப்பில் உதவி வழங்கும் நாடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியை விடஇ மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடத்தில் இடம்பெற்ற இந்த நிதி மோசடிஇ பத்து மடங்கு என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.