மத்திய வங்கி பினைமுறி விவகாரத்தில் அனைத்து விடயங்களும் நாடகமாகவே காணப்படுகின்றது. இதில் தவறிழைத்தவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நேர்மையான முறையில் இடம்பெறுவதாக தெரியவில்லை. மாறாக சம்பந்தப்பட்டோரை பாதுகாப்பதற்கே முயற்சிக்கப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே இது தொடர்பான செயற்பாடுகள் அவ்வாறே காணப்படுகின்றன.
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக வெளிநாட்டு குடிமகனை நியமிக்க தலைமை அமைச்சர் முற்பட்டபோது அமைச்சரவை அதனை எதிர்த்துள்ளது. எனினும் தான் அதனை பொறுப்பேற்பதாக கூறி அந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் இவ்வளவு பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது.
தற்போது நடைபெறும் அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான நாடகமே இடம்பெறுவதாக எமக்கு தோன்றுகின்றது – என்றார்.