நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த சில மணி நேரங்களில்இ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ டருவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்இ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில்இ சீமான் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸஇ ருவிட்டரில் பதிலளித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தைஇ சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே பயன்படுத்தும் சீமானுக்குஇ இலங்கை தமிழர்கள் மீது உண்மையான அக்கறையில்லை என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.