பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும்இ ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்இ தியோகாரில் உள்ள அரசு கருவூலத்தில் கால்நடை தீவனம் வாங்கியதாக ரூ.89 லட்சத்து 27 ஆயிரம் எடுத்து ஊழல் புரிந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ.இ தனிக்கோர்ட்டு கடந்த 6-ந் தேதி அவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் லாலு பிரசாத்தின் வக்கீல்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லாலு பிரசாத்தை ஜாமீனில் எடுக்க முடிவு செய்துள்ளோம். எனவே அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை விவரத்தை உன்னிப்பாக படித்து வருகிறோம். வருகிற 12 அல்லது 15-ந் தேதியில் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வோம்.
லாலு பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியில் அவருடைய சகோதரி இறந்து விட்டார். இதனால் அவருக்கு பரோல் கேட்டு மனு தாக்கல் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.