மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தூக்கில் போடப்பட்டார். அவர் சுட்ட 3 குண்டுகள்இ காந்தியின் உயிரை பறித்ததாக கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில்இ அடையாளம் தெரியாத யாரோ சுட்ட 4-வது குண்டில்தான் காந்தி உயிரிழந்தார் என்று தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பங்கஜ் குமுத்சந்திர பாட்னிஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில்இ ‘காந்தி உயிரை பறித்த 4-வது குண்டை சுட்டது யார் என்பது மர்மமாக உள்ளது. எனவேஇ காந்தி கொலை பற்றி மறுவிசாரணை நடத்த வேண்டும். வெளிநாட்டு உளவு அமைப்பு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது’ என்று அவர் கூறி இருந்தார்.
இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் அமரேந்திர ஷரண் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில்இ ‘காந்தி மீது 4-வது குண்டு சுடப்பட்டதாக கூறப்படுவது பற்றி எந்த ஆதாரமும் இல்லை. வெளிநாட்டு உளவு அமைப்பு தொடர்பு என்று கூறுவது அடிப்படையற்றது. அதற்கும் ஆதாரம் இல்லை’ என்று ஷரண் கூறியுள்ளார்.