சென்னை திருவல்லிக்கேணியில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விளக்க நோட்டீசுகள் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும் வக்கீல்கள் இன்றைக்கு (நேற்று) நடைபெற்ற ஐகோர்ட்டு விசாரணைக்காக சென்றிருந்தார்கள். அங்கே சென்று இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? போராட்டம் சட்ட ரீதியாக எவ்வாறு நடத்தப்படுகிறது? என்பதையும்இ இந்த போராட்டத்துக்கு காரணம் 16 மாதங்களாக ஊதிய உயர்வு கொடுப்பதில் நிர்வாகம் எப்படி கால தாமதம் செய்துவந்தது? அதுமட்டுமல்லாமல் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை நிர்வாகத்துக்காக செலவு செய்தது போன்ற அவலங்களையெல்லாம் முன்வைத்துஇ இதனை கடந்த 7 ஆண்டுகளாக தொழிலாளர்கள் எப்படி தாங்கி கொண்டிருக்கிறார்கள்? என்பதை தலைமை நீதிபதி முன்பாக வக்கீல்கள் எடுத்துரைத்தனர். இதையெல்லாம் கேட்டு தலைமை நீதிபதியே வியந்து போனார்.
‘பிடித்தம் செய்த பணத்தை முழுவதுமாக தொழிலாளர்களுக்கு தாமதமின்றி உடனடியாக வழங்கவேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். மற்ற பிரச்சினைகள் தொடர்பாக 3-வது அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை நான் அனுப்புகின்றேன். உடனடியாக உரிய முறையில் விசாரித்து உங்களுக்கு நல்லது நடக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று நீதிபதி தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் இன்றைக்கு (நேற்று) அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அமர்ந்து பேசினோம்.
எனவே இனியாவது பொதுமக்கள் நலனுக்காக கவுரவம் பார்க்காமல் தொழிற்சங்கங்களை உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வர வேண்டும். ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின்போது போடப்பட்ட ஒப்பந்தம் சட்ட விரோதமானது. அதை ரத்து செய்துவிட்டுஇ நாங்கள் கேட்கும் ஊதிய உயர்வு பற்றி பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் போக்குவரத்து கழகத்தில் பயிற்சி இல்லாத தொழிலாளர்களை பணியில் அமர்த்தியதால் பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்துள்ளன. அதேபோல பயிற்சி இல்லா கண்டக்டர்களால் வசூல் செய்யப்படும் தொகை முழுவதும் கபளகரம் செய்யப்படுகிறது. இதனால் பொருளாதார இழப்பு மேலும்இ மேலும் அதிகரிக்கி றது. அதேபோல ஆளும் கட்சி அளிக்கும் பொய் புகார்களின் மீது பொய் வழக்குகளை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாளை (இன்று) மாலை அனைத்து போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர். அதன் பிறகாவது இந்த அரசு நல்ல முடிவை அறிவிக்கிறதா? என்று பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சி.ஐ. டி.யூ. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் உடனிருந்தார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும்இ தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு எச்.எம்.எஸ். அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
எச்.எம்.எஸ். தமிழக செயல் தலைவர் சுப்பிரமணிய பிள்ளைஇ ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய செயலாளர் வஹிதா நிஜாம்இ சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன்இ தொ.மு.ச. பொருளாளர் நடராஜன்இ பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் ராம.முத்துகுமார் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சவுந்தரராஜன் பேசும்போதுஇ ‘போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி கொடுக்கும்போதுஇ போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு எவ்வளவு? என்ற விவரம் தெரியாமல் போராடுகின்றனர் என்றும்இ தெரிந்தால்இ பணிக்கு வருவார்கள் என்றும் கூறியிருக்கிறார். அவர் கூறும் 2.44 காரணி ஊதிய உயர்வை பெருக்கி பார்த்துவிட்டு தான்இ தொழிலாளர்கள் போராட்டத்துக்கே வந்துள்ளனர். எங்களோடு அமர்ந்து ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்க தயாரா?’ என்று சவால் விட்டார்.