அரக்க சிங்களமே
அந்த அடிபனையையும்
நீ விட்டு வைக்கவில்லையா
மனித நேயம் என்றால்
என்னவென்று கற்றுகொள்ளடா
காடையனே என்னருகில்
அமர்ந்திருக்கும் அந்த
செல்லப் பிராணியிடம்
கண்கள் பூத்திருக்க
என் கண்மணிகள் வரவுக்காய்
தனித்திருக்கின்றேன் இந்த
தள்ளாத வயதில்
துயர்களை சுமக்கின்றேன்
என் ஈன்ற வயிற்றில்
எரியும் நெருப்பை
ஒரு நொடி நீ உணர்ந்தால்
அணுகுண்டின் தாக்கம்
என்னவென்று உணர்வாயாடா
என் ஒட்டிய கன்னமும்
குழிவிழுந்த கண்களும்
உன் பாட்டியின் நினைவை
தரவில்லை என்றால் மனிதனாக
உன்னை பிரசவித்த அந்த
தாயின் உயிரையும் நீ குதறிட
தயங்கிட போவதில்லை
மனித குலத்தின் வந்துதித்த
அசிங்கமான எச்சம் நீயென
நாளை இந்த வரலாறு
உன்னை எழுதட்டும்
சிங்கள காடையனே
என் மனம் எரிந்து சொல்கின்றேன்
உன் குலத்தின் குருத்துக்கள்
யாவும் கருகிடும் நாட்கள்
தொலைவிலில்லை
காவிய நாயகர்கள் கால்பட்ட
புனித பூமியில் உன்
கால்தடங்கள் பதிவதை
என் மனம் ஓப்பவில்லை
வீர மங்கையிவள் கூனல்
விழாது இருந்திருந்தால்
உன் குடலுருவி மாலையாக்கியிருப்பேன்
-காவியா