ஒன்றிணைந்த பார்வைத் திறனற்ற பட்டதாரிகளின் சங்கம் நேற்று தம்புள்ளையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளது.
அதில் பேசிய சங்கத் தலைவர் எச்.எம்.லால் புஷ்பகுமாரஇ ‘இலங்கையில் பார்வைத் திறனற்ற பட்டதாரிகள் எழுபது பேர் இருக்கின்றனர். இன்னும் முப்பது பேர் விரைவில் பட்டம் பெறவுள்ளனர். 2013 முதல் எமக்கு வேலைவாய்ப்புத் தருமாறு கோரி வருகிறோம். ஆனால் இதுவரை பதவிக்கு வந்த ஒரு அதிகாரியோஇ அரசியல்வாதியோ எங்களில் ஒருவருக்கேனும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அங்கு பேசிய சங்கத்தின் உறுப்பினரான எல்.ஆர்.மதுஷங்க என்ற பார்வைத் திறனற்றவர்இ ‘இலங்கையில் மாற்றுத் திறனாளிகள் சுமார் பதினேழு இலட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் எதிர்வரவுள்ள உள்ளூராட்சித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரவுள்ளோம்’ என்றார்.
இதன்மூலம்இ வாக்குரிமை உள்ள மாற்றுத் திறனாளிகள் பதினேழு இலட்சம் பேரின் வாக்குகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.