உலகத்தமிழர் உதவும் காங்கள் உறவுகளின் நிதி உதவியின் ஊடாக மலையகம், மட்டக்களப்பு ஆகிய இரு இடங்களிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 85 குடும்பங்களுக்கு பொங்கல் பொதி வழங்கப்பட்டது! மலையகத்தில் 41 குடும்பங்களுக்கும் மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தில் 44 குடும்பங்களுக்குமாக மொத்தம் 85 குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மலையக செந்தமிழர் பேரவை,செந்தமிழர் பேரவை வளைகுடா இணைந்து மலையகத்தில் வழங்கி இருந்தனர்.
ஆதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் தேன்கூடு நிறுவனத்தினர் இவ் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர் அதற்கு இணங்க 10.01.2018 நேற்று இவ் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.ராகுலநாயகி அம்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கலாச்சார உத்தியோகஸ்த்தர், பிரதேச சமுர்த்தி முகாமையாளர், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், மலையக செந்தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ச.டிசான் தேன்குடு நிறுவனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மலையகத்தில் இருந்து வருகை தந்திருந்த குழாம், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்! உதவி பிரதேச செயலாளரினால் உலகத்தமிழர் உதவும் கரங்கள், மலையக செந்தமிழர் பேரவை, தேன்கூடு அமைப்பினருக்கும் நன்றி கூறியதுடன் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது!