இலங்கையில் 2005 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல்வேறு வழிகளில் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட செய்தியாளர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் அமைச்சரவைக்கு விதப்புரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. இதன் கால எல்லை 2007 மே மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இந்த சமயத்தில் 14 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றன.
இதன் அடிப்படையில் மேன்முறையீடுகளை பரிசீலித்து சிபார்சு செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் இந்த உப குழுவில் இடம்பெற்றுள்ளனர்.