முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு தின அனுஷ்டிப்பு இன்று காலை செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நினைவு தின அனுஷ்டிப்பில் மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன் மற்றும் வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும், செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் தீபம் ஏற்றி நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.