அ.தி.மு.க.வினருக்கு மட்டும் கொடுக்க முடியாது என்பதால் அனைத்து எம்.எல்.ஏ.இக்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் எம்.எல்.ஏ.இகளுக்கு 100 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதை ஏற்க முடியாது. இதுதான் கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது.
ஜெ.இ நினைவிடம் அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசி உள்ளார். இது அவரது குதர்க்கமான புத்தியை காட்டுகிறது. அவரது தரத்திற்கு இது அழகா என சிந்தித்து பார்க்க வேண்டும். நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தாலும்இ மக்கள் மன்றம் ஜெ.இவை ஏற்றுக் கொண்டது.
அ.தி.மு.க.இ தோல்விக்கு அமைச்சர் ஜெயகுமார் முக்கிய காரணம். தொகுதியில் அவருக்கு கெட்ட பெயர் உள்ளது. மீனவர் பகுதிக்கு அவர் செல்லவே முடியாத நிலை உள்ளது. பா.ஜ.இவிற்கு பயந்து அக்கட்சியின் கைத்தடிகளாக உள்ளனர். அரசு கலண்டரில் தலைவர் படம் இல்லாமல் வேறு நபர் படத்தை வைத்துள்ளனர். கட்சியில் பங்காளி சண்டை முற்றியுள்ளது. விரைவில் அது வெளிவரும் என கூறினார்