சி.பி. ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதாக இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தவழக்கு கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டால்இ மும்பை ஆர்தர்சாலை சிறையில் அடைக்கப்படுவார்.அங்கு போதிய வசதிகள் உள்ளன என இந்தியா சார்பில் வழக்கறிஞர் கூறினார். அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். நீதிபதி எம்மா ஆர்புத்நோட்இ ஜன. 11-ம் தேதி ஒத்தி வைத்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பை பொறுத்தே மல்லையா நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிவரும்.