வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை இந்தியாவால் வழங்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று இந்தியத் தூதுவர் தான் ஜித் சிங் சந்துவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்துவை கடந்த வெள்ளிக்கிழமை இந்தியத் தூதரகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தும்போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அத்துடன், அது நீதிமன்றத்துடன் தொடர்புடைய விடயம். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் எவ்வாறாக அதனைக் கையாளலாம் என்பதை இந்திய நடுவண் அரசே தீர்மானிக்கவேண்டும். உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை.