வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 78ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் மற்றும் அவசரகால சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீர்வு கிடைக்கும் வரை இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.