பெப்ரவரி 21ம் திகதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார்.முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை ஆரம்பிக்கிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றியை தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.
குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோர்த்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.