சக்தி பெற்ற மனிதரெல்லாம்
வீரவான்கள் இல்லை!
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றிக் காண்பதில்லை!
வெற்றி வரும் நேரம் காலம்
தானாய் அமைவதில்லை!
முயற்சி உழைப்பு இரண்டும் சேர்ந்தால்
வெற்றி தூரம் இல்லை!
உன்னை நம்பு உழைப்பை நம்பு
முயற்சி தோற்பதில்லை!
எழுச்சி கொண்டு உயர்ச்சி தேடு
வீழ்ச்சி என்பதில்லை!
வீழ்ந்து எழுந்து முயன்று தவறு
இடர்கள் எல்லை இல்லை!
இலக்கை அடைய உறுதி எடு;
நீங்கிப் போகும் தொல்லை !
நெஞ்சில் துணிவு உயர்வில் பணிவு
நாவில் உண்மை சேர்த்து;
நேர்மை கொண்டு விவேகம் கண்டு
செயலில் வேகம் கூட்டு!
துன்பம் துயரம் தாக்கும் நேரம்
துணிந்து எதிர்த்து நின்று …
தக்க தருணம் அமையும் சமயம்
வெற்றி மாலை சூடு!!
– வேலணையூர் ரஜிந்தன்.