கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதிகளில் மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் அதி உச்ச போர் நடைபெற்ற இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.
குறித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேறி எட்டு ஆண்டுகள் ஆகின்ற போதும் இன்றும் அந்த இடங்களில் போரின் அழிவுகள் அடையாளங்களாக காணப்படுகின்றன.
குறிப்பாக அம்பலவன், பொக்கணை, வலைஞர் மடம், புதுமாத்தளன் சாலை போன்ற இடங்களின் பிரதான வீதியாகக் காணப்படுகின்ற இரட்டைவாய்க்கால் சாலை வீதி இன்று வரை புனரமைக்கப்படாமல் மிக மோசமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனைவிட வீதியின் இரு பக்கங்களிலும் யுத்தத்தின் சிதைவுகளை சுமந்த வீடுகள், ஏனைய கட்டடங்கள், மக்கள் உயிர் வாழ்வதற்காக ஆங்காங்கே அமைத்த பதுங்கு குழிகள், போரின் கொடூரத்தை சித்தரிக்கின்ற அடையாளங்களாக காணப்படுகின்றன.
மேலும், முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிவுகளும் போரின் அடையாளங்களும் இன்று வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.