1, 10, 19, 28 A, I, J, Q, Y
* சமூகத்தில் அந்தஸ்து மிக்கவராக விளங்குவீர்கள்.
* வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு பல மடங்கு உயரும்.
* ஆடம்பர முறையில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.
* உடற்பயிற்சியால் உடல்நிலை சீராகும். மருத்துவ செலவு குறையும்.
* தொழிலதிபர்கள் கிளை நிறுவனம் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* வியாபாரிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு ஆதாயத்தை இரட்டிப்பாக்குவர்.
* பணியாளர்கள் பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர்.
* விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி மூலம் விளைச்சலை பெருக்குவர்.
* பெண்கள் புகுந்த வீட்டினர் மத்தியில் கவுரவத்துடன் திகழ்வர்.
* மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறப்பாக திகழ்வர்.
2, 11, 20, 29 B, K, R
* நற்செயல்களில் ஈடுபட்டு பலராலும் பாராட்டப்படுவீர்கள்.
* வருமானம் திருப்தியளிக்கும். சிக்கனத்தால் சேமிப்பீர்கள்.
* சுபநிகழ்ச்சிகள் தடையின்றி மளமளவென நடந்தேறும்.
* உடலில் தெம்பும், மனதில் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
* தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் ஆதாயம் அடைவர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் தொழிலை விரிவுபடுத்துவர்.
* பணியாளர்களுக்கு விரும்பிய பணிமாற்றம் விரைவில் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினராலும் விரும்பப்படுவர்.
* விவசாயிகள் நவீன கருவிகளை திட்டமிட்டபடி வாங்குவர்.
* பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
* மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.
3, 12, 21, 30 C, G, L, S
* பிறரை எதிர்பார்க்காமல் சுயமாக செயல்படுவீர்கள்.
* பூர்வீக சொத்து மூலம் திடீர் வருமானம் கிடைக்கும்.
* எதிர்பார்த்ததை விட சுபநிகழ்ச்சி சிறப்பாக அமையும்.
* உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
* தொழிலதிபர்கள் தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பர்.
* வியாபாரிகள் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர்.
* பணியாளர்கள் பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் விசுவாசத்திற்கு உரியவராக திகழ்வர்.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் சற்று அதிகரிக்கும்.
* பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பர்.
* மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.
4, 13, 22, 31 D, M, T
* பெருந்தன்மையுடன் அனைவருக்கும் உதவ முன்வருவீர்கள்.
* வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும். கடன் பிரச்னை தீரும்.
* சுபவிஷயம் தாமதம் என்றாலும் விரும்பிய முடிவு கிடைக்கும்.
* பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
* தொழிலதிபர்கள் சக தொழிலதிபர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* வியாபாரிகள் வங்கி நிதியுதவியுடன் மூலதனத்தை அதிகப்படுத்துவர்.
* பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை ஒவ்வொன்றாக கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர்.
* விவசாயிகள் புதிய நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* பெண்கள் அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பர்.
* மாணவர்கள் விடாமுயற்சியால் கல்வி வளர்ச்சி காண்பர்.
5, 14, 23, E, H, N, X
* இனிய பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள்.
* எதிர்பார்த்ததை விட பல வழியிலும் வருமானம் அதிகரிக்கும்.
* சுப விஷயத்தில் தடை விலகும்.
* உடற்பயிற்சியில் நாட்டம் உண்டாகும்.
* தொழிலதிபர்கள் வெளி நாட்டு ஒப்பந்தம் மூலம் லாபம் அடைவர்.
* வியாபாரிகள் அரசாங்க வகையில் ஆதாய பலன் கிடைக்க பெறுவர்.
* பணியாளர்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சலுகை காண்பர்.
* அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் விளைபொருளை நல்ல விலைக்கு விற்று மகிழ்வர்.
* பெண்கள் குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுவர்.
* மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முன்னேறுவர்.
6, 15, 24, U, V, W
* கடந்த கால உழைப்பின் பலனை பெற்று மகிழ்வீர்கள்.
* சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். தேவை பூர்த்தியாகும்.
* உறவினர் ஆதரவால் சுபநிகழ்ச்சி தடையின்றி நிறைவேறும்.
* தொழிலதிபர்கள் புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு வளர்ச்சி காண்பர்.
* வியாபாரிகள் சாதனை படைக்கும் எண்ணத்துடன் செயல்படுவர்.
* பணியாளர்கள் சக ஊழியர்களின் அன்பை கண்டு மனம் நெகிழ்வர்.
* அரசியல்வாதிகள் தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கப் பெறுவர்.
* பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து ஆலோசிப்பர்.
* மாணவர்கள் திட்டமிட்டு படித்து கல்வி வளர்ச்சி அடைவர்.
7, 16, 25, O, Z
* எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேற தொடங்கும்.
* வருமானம் திருப்தியளிக்கும்.
* ஆடம்பரமாக செலவழிப்பீர்கள்.
* மனம் போல மங்கல நிகழ்ச்சி நடத்திடும் சூழல் உண்டாகும்.
* உடல்நிலை சீராக இருக்கும். பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.
* தொழிலதிபர்கள் அரசு வகையில் நன்மை கிடைக்க பெறுவர்.
* வியாபாரிகள் சக வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* பணியாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு பணியிலக்கை நிறைவேற்றுவர்.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு விரைவில் கிடைக்கும்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் நல்ல வளர்ச்சி காண்பர்.
* பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர்.
* மாணவர்கள் விடாமுயற்சியால் வெற்றி வாகை சூடுவர்.
8, 17, 26, F, P
* எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனை மேலோங்கும்.
* அதிர்ஷ்டவசமாக வருமானம் உயர தொடங்கும்.
* சுபவிஷயத்தில் இழுபறி நீடித்தாலும் முடிவு நன்மையாகும்.
* உடலில் வலிமையும், மனதில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
* தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர்.
* வியாபாரிகள் புதிய வாடிக்கையாளரை கவரும் விதத்தில் செயல்படுவர்.
* பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளித்து வெற்றி காண்பர்.
* அரசியல்வாதிகள் மாறி வரும் அரசியல் சூழலை சாதகமாக்குவர்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் அடைவர்.
* பெண்களுக்கு சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
* மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படித்து முன்னேறுவர்.
9, 18, 27
* துணிச்சலுடன் செயல்பட்டு தடைகளை தகர்த்தெறிவீர்கள்.
* எதிர்பார்த்ததை விட வருமானம் பன்மடங்கு உயரும்.
* பிள்ளைகள் வழியில் சுபநிகழ்ச்சி நடத்திட வாய்ப்புண்டாகும்.
* பெற்றோர் உடல்நிலையில் அக்கறை கொள்வது நல்லது.
* தொழிலதிபர்கள் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர்.
* வியாபாரிகள் வங்கி நிதியுதவியுடன் விரிவாக்க பணியில் ஈடுபடுவர்.
* பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன் மதிப்பிற்கு உரியவராவர்.
* அரசியல்வாதிகள் தொண்டர் எதிர்கால நலன் குறித்து ஆலோசிப்பர்.
* விவசாயிகள் விளைபொருளை அதிக விலைக்கு விற்று மகிழ்வர்.
* பெண்கள் கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்க பெறுவர்.
* மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர்.