நாளை (25 01 2018) பகல் மலேயா பல்கலையின் இந்திய ஆய்வியல் துறை மாணவர்கள் நமது முற்றம் மாணவ கலைஞர்களுடன் இணைந்து தமிழக நாட்டார் கலைகள் பயிலரங்கில் கலந்துக் கொண்டு பண்பாட்டு ஊடாட்ட தொடர்பியல் திறன்களை கற்றுக் கொள்வார்கள்.
மொழி உரிமை, தொடர்பியல் உரிமை. நாளை மொழிப் போர் ஈகியர் நாள். 1960களில், மொழிப்போர் களங்களில் பங்குக் கொண்ட மூத்த இதழியலாளர், திரு மணி மற்றும் மேனாள் கல்லுரி ஆசிரியர், முனைவர் திருமாவளவன் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். பேரா. மணிவண்ணன் அரசியல் துறைப் பார்வையில் மொழிப் போர் ஈகியர் நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றுவார்.
நாம் மறக்கலாகாத, நம் துறையின் மேனாள் மாணவரும், மூத்த இதழியலாளராக தமிழர்களின் நலனுக்காக அருமையாக பணியாற்றிய, திரு ஞானி அவர்களுக்கான நினைவேந்தல் நாளை நடைபெறும்.
Three events for another meaningful day!
University of Malaya’s Indian Studies’ Dept. students will engage in inter-cultural/communication mode to learn Tamil folk arts tomorrow (25 01 2018) afternoon with Muttram students.
Language right is the foremost communication right. We will have veteran journalist, Thiru TSS Mani and a former college teacher, Dr Thirumavalavan, who participated in the anti-Hindi agitations of 1960s to share their experiences and thoughts on the eve of the Language Martyrs’ Day. Prof. Ramu Manivannan will have a take on the issue as a political scientist.
We will be missing for ever our illustrious alumnus, Thiru Gnani, who graduated with a certificate in Journalism from DJC in 1975. Friends of Gnani will commemorate Thiru Gnani with their tributes.