சிங்களத்தின் கைப்பாவையான கே.பியைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற போலிக் கட்டமைப்பின் உப குழுவாக உருவாக்கப்பட்ட அனைத்துலகத் தொடர்பகம் என்ற இன்னொரு போலிக் கட்டமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளராக விளங்குபவர் சந்தோசம்.
கடந்த மாவீரர் நாளன்று அறிக்கை வெளியாவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சந்தோசம் என்றழைக்கப்படும் பரமநாதன் யாதவன் என்பவர் தனது போராளி மனைவி தாய்லாந்து சிறையில் வாட, சுவிற்சர்லாந்தில் இன்னொரு பெண்ணை மணம் முடிக்கத் தயாராகி வருவதை உறுதி செய்யும் கையெழுத்துப் பிரதி ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
இவ் ஆதாரங்களை சந்தோசம் அவர்களின் மனைவியான தாய்லாந்தில் சிறையில் வாடும் குழலினி அல்லது தாயகி என்றழைக்கப்படும் ஜெயந்தி என்ற முன்னாள் போராளி வெளியிட்டுள்ளார்.
கே.பியைத் தமது தலைவராக ஏற்றுக் கொண்ட தயாமோகன், இராமு சுபன் (முத்துவேல் யோகராசா) ஆகியோரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் எழுதப்பட்ட அறிக்கையைக் கடந்த மாவீரர் நாளன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் நாள் மண்டபங்களில் வெளியிட நிர்ப்பந்தித்தவரும் இவரே.