மழை முகில்கள் கூடி வந்து …
கூந்தலுக்குள் குடி கொள்ள …
மனம் குலைந்து போனதடி ;
மங்கை பின்னும் ஒற்றை சடையில் !
பூங்கொடிகள் பூத்திருக்கும்
உன் கூந்தல் ஏந்திக் கொள்ள …
உன் இதழ்கள் பார்த்துவிட்டால்
வண்டுகளும் தேன் எடுக்க ;
பூவை விட்டு நாடிவரும் !
மெல்லினமும் வல்லினமும்
இடையினமும் உன் நடையில் கண்டேன் !
மனம் உடைந்து போனதடி
மெலிந்த இடை கண்டதனால் !
தக்காளிப்பழ நிறத்தழகில்
கன்னம் இரண்டும் சிவந்திருக்க ;
நெற்றிப் பொட்டு வட்டத்திற்குள்
நெஞ்சம் சிறைப் பட்டதடி !
கண்கள் வெட்டும் மின்னல்க் கதிர்
மாட்டிக் கொள்ளும் எந்தன் உயிர்
இமை இரண்டும் அம்பாக
பார்வை அம்பு வீசுதடி !
விரல்கள் தீண்ட விரல்கள் ஏங்க
உந்தன் கையில் எந்தன் உலகம் !
வளையல் மாட்டும் அழகுக் கையில் ;
உள்ளங்கையில் உள்ளம் தஞ்சம் !
அழகோவியப் புன்னகையில் ,
அடிமைப்பட்டது என் இதயம் …
செவ்விதழின் சொல் உதிர்ப்பில் ;
சித்திரமே பேசுதடி !
– வேலணையூர் ரஜிந்தன்.