தமிழர்களின் பண்பாட்டு
விழுமியங்கள் இன்றைய காலத்தில்
பேணிப் பாதுகாக்கப்படுகிறதா ?
(கலாச்சாரம்) (பண்பாடு) என்று
இரண்டு சொற்களில் தமிழர்களின்
விழுமியப் பாரம்பரியத்தை
நாம் பேசி வருகிறோம் ஆனால்
இவை இரண்டு சொற்களின் பதம்
ஒன்றைத்தான் குறிக்கிறது
“கலாச்சாரம்” எனும் சொல்லானது
[சமஸ்கிருத] சொல்லாகும்
“பண்பாடு” என்பதுதான் தூய தமிழ்
சொல் எனப்படும். இந்த இரண்டு சொற்களின் பொருளும் ஒன்றுதான்
பண்பாடு என்பது
வியாபித்த பொருண்மையுடன்
பயன்படுத்தப்படும் சொல்லாகும்
ஆங்கிலத்தில் [Culture கல்ச்சர்] எனும்
சொல்லுக்கு இணையான பொருளில்
பண்பாடு எனும் சொல் தமிழில்
பேசப்படுகிறது பேணப்படுகிறது.
பண்பாடானது அமைப்பின்
,வரலாற்றுப் போக்குகள், ,பண்புகள்,
,அறிவு பரம்பல்கள், ,வாழ்வியல்
வழிமுறைகள், ,சமூகக் கட்டமைப்பு,
,தாய்மொழி, ,அன்றாட உணவு,
,இசை ,சமய நம்பிக்கைகள்,
,தொழில் தெரிவுகள்,
என்று வரையறை படுத்துகின்றன
அதாவது மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளையும் மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கும் அவற்றை மதிப்பிடுவதற்கும்.
(Culture: A Critical Review of
_Concepts and Definitions)
என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தமிழர்களின் பண்பாடு
அன்றைய காலம் தொடங்கி
இன்றுவரை பேணப்படுகிறதா?
இல்லை நவனாகரிக மாற்றங்களால்
இன்றைய காலச்சூழலில்
பேணிப் பாதுகாக்கப் படுகின்றனவா?
இன்று பலருக்குள் உறைந்து கிடக்கும்
ஒரு ஆழமான கேள்வியாக
இருந்துவருகிறது என்பது திண்ணம்.
சில ஆய்வுகளின் படி
இன்றைய காலத்தில் தமிழர் பண்பாடு
மங்கி அழிந்து வருகிறது அவைகளை
மீண்டும் பேணிப் பாதுகாக்க
முடியவில்லை என்றே பலரின்
கருத்துக்கள் அமைகின்றன.
தமிழர் பண்பாடு என்றால் என்ன ?
தமிழ் மொழியின் ஆழமான நேசிப்பின் வெளிப்பாடாகவும் தமிழர் தாயகப் பிணைப்பின் கேண்மைத்துவத்திலும்
தமிழர் மரபுகள், வரலாற்று விழுமியங்களைத் தனித்துவ
பண்பாடாகக் குறிப்பிடலாம்.
இதிலிருந்து கூறுவது என்னவென்றால்
தமிழர்களின் பண்பாடு தாய் மொழியான
தமிழ் என்பது என்பதே ஆகும்
அதாவது [பாவாணர் கூறுகிறார்]
பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம்,
நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை.
முன்னது ‘அகக்கூறு ‘ என்றும்
பின்னது ‘புறக்கூறு’ என்றும் .
நாகரிகம் சேர்ந்த பண்பாடுமுண்டு ,
நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு .
தமிழர் பண்பாடு என்பது இவை
இரண்டிலும் வேறுபட்டது
அதாவது தாய்மொழியான
தமிழ் மொழியைப் பேணுவதே
தமிழர் பண்பாட்டில் மேன்மையாகும்.
தந்தை பெரியார் தன் வார்தைகளில்
இதனையே விதைத்துச் சென்றுள்ளார்.
ஆனாலும் இன்றைய காலத்தில்
பலரின் கருத்துகள் தமிழர்
பண்பாட்டைக் காக்கவோ பேணவோ
முடியாது என்பதைக் குறிக்கிறது
இதற்கு பல காரணங்கள் அமைகின்றன.
அதாவது ஆடை மாற்றங்கள்
பிற கலாச்சாரத் திணிப்பு
ஆங்கில மொழியின் வலுத் தேற்றம்
பாரம்பரிய சுவடுகள் அழிந்தமை
ஆங்கிலத்தில் பேசினால் தான்
மதிப்பீடு என்று பல கருத்துக்களை
இன்றைய தலைமுறை பேசிவருகிறது.
ஆங்கிலம் அவசியம்
பிற கலாச்சாரமும் அவசியம்
ஆங்கிலம் கற்பது பலவற்றையும்
நாம் புரிந்துகொள்ள வேண்டும்
அது தமிழர் பண்பாட்டின் மேன்மையாகும்
அன்றைய காலப்பகுதிகளில்
தமிழர் பண்பாடு விளங்கிய விதம்
பண்பாட்டின் சிறப்பு என்பதை
தெளிவாக பாப்போம் என்றால்
தமிழில் தழைத்தோங்கியே
தலைசிறந்தார்கள் என்பதே உண்மை
பெரும் படையோடு
வரி கேட்டு வந்த வெள்ளையனை
நீ மக்களுக்கு சேவையும் செய்யாமல்
வேலையும் செய்யாமல் முறையாக
மக்களிடம் இருந்து ஆட்சியையும்
பெறாத உனக்கு ஏன் வரி
செலுத்த வேண்டும் என்று
துணிவோடு பேசிய விரட்டிய
கட்டபொம்மனின் பேச்சு
தனது கருத்து
சரி என்று உணர்ந்ததால்
கடவுள் என்று சொல்லக்கூடிய
சிவனையே பார்த்து நீ
கடவுளாகவே இருந்தாலும்
உம் நெற்றியில் ஒரு கண்
காட்டிய போதிலும் நெற்றிக் கண்
திறப்ப்பிலும் குற்றம் குற்றமே என்று
நக்கீரனின் பேச்சு
இப்படியான வரலாற்றுச்
சுவடுகள் தமிழ் பண்பாட்டு
விழுமியங்களைப் போற்றியே
வீரியமாக சிறந்து விளங்கின
ஆனால் இன்றைய காலச்சூழலில்
பலரும் அறியாமை எனும்
பிடியில் தமிழர் என்று கூறிப்
பண்பாட்டை பேணிப் பாதுகாக்க
முடியவில்லை என்று கூறுகிறார்கள்
அன்று இணைய தளங்களோ
பத்திரிகைகளோ வானொலிகளோ
இல்லை முகநூல் தளங்களோ
பெரிதாக இருக்கவில்லை
ஆனாலும் தமிழரின் பண்பாடு
தாய் மொழியான தமிழ் மொழி
ஓங்கி ஒலித்தது உண்மை
தற்காலத்தில் இணையதளம்
முகநூல்தளம் பத்திரிகை
ஊடகங்கள் என்று பரிணாம
வளர்ச்சி பெற்று மாறியுள்ளது
ஆனாலும் தமிழர்களின் பண்பாடு
அழியவோ மறையவோ
மங்கிவிடாவோ இல்லை மாண்டுவிடவோ
இல்லை மலர்கிறது துளிர்க்கிறது
பல முகநூல் குழுமங்கள்
ஆளுமை நிறைந்த ஆசான்களின்
அறிவுரையோடு இலக்கியம்
சார்ந்த போட்டிகள் நடத்திப் பல
படைப்பாளிகளை வெளிக்காட்டி
வருகின்றன முகநூல் மூலம்
இன்று பல படைப்பாளிகள்
கொடிகட்டிப் பறக்கிறார்கள்
இது இன்றைய நிதர்சனம்
எனவே என்னுடைய கருத்து
அதாவது இன்றைய காலத்தில்
எங்கள் பண்பாடு பேணப்படுகிறது
சிலர் இல்லை என்று கருத்திட முடியும்
இல்லை என்று விளக்கம்
கொடுக்கவும் முடியும் ஆனால்
காரணம் தமிழரின் பண்பாட்டின்
முதன்மை மொழியான
தமிழ் மொழி இதை ஒவ்வொரு
தமிழரும் புரிந்தால் தமிழர்
பண்பாட்டு விழுமியங்கள் நிச்சயம்
பேணப்படும் அடுத்த தலைமுறையும்
உறுதியாய் கூறும் தமிழர்களின்
பண்பாடு தாய் மொழியான
தமிழ் மொழி தாயக இணைப்பு
என்றும் பேணப்படும் என்று.
– வன்னியூர் கிறுக்கன்