2007 ம் ஆண்டின் இறுதியில் ஒரு நாள்
தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்.
மண்ணுக்காக மரணித்த ஒரு அக்காவின் வித்துடல் விதைக்கப்பட்டுக்கொண்டு இருந்தது.சம்பிரதாயங்கள் முடிந்து பாடல் ஒலித்து 3 துப்பாக்கி வேட்டுடன் அவரது உடல் மண்ணில் விதைப்பதற்க்காக குழியினுல் இறக்கினார்கள். அதுவரை அந்த கூட்டத்தில் அமைதியாக நின்றிருந்த அந்த இளைஞன். ஜயோ பெளசி என்ற பெளசி குட்டி என்று கத்தி அழுது கொண்டு வித்துடல் இறக்கப்பட்ட குழியினுள் குதித்தான்.
அவனை வெளியில் தூக்கி சமானப்படுத்தி வித்துடல் விதைக்கப்பட்டது எல்லோறும் சென்ற விட்ட பின்னரும் அவன் அந்த இடத்தில் இருந்து அழுதுகொண்டு இருந்தான்.அவனுக்கு ஒரு 20,22 வயதிருக்கும் கொஞ்சம் மா நிறம் சவரம் செய்யப்படாத முகம் ஒரு நீலக்கலர் சேர்ட் மற்றும் கருப்பு ஜுன்ஸ் போட்டிருந்தான்.
எனக்கு அவனை பார்க்க பரிதாபமாக இருந்தது பேச்சுக்கொடுத்தேன்.
என்னை மேலும்.கீழும் பார்த்துவிட்டு ஜயோ தம்பி என்ற பெளசி குட்டிய மண்ணுக்குள்ள புதைச்சிட்டாங்க ஜயோ என்ற அம்மாச்சி பெளசி என்று கத்தி அழுதான்
அழாதீங்க அண்ணா என்று அவனை ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தேன் அவன் தன் கதையை சொல்லத்தொடங்கினான்.
அவன் பெயர் நிசாந்தன் என்றும் புதுக்குடியிருப்பில் மேசன் வேலை செய்து வருவதாகவும் சொந்த ஊர் இது இல்லை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன். இங்கே தொழில் நிமித்தமாக வந்த இடத்தில் A9 பாதை பூட்டப்பட்டமையால் இங்கே தங்கிருந்து வேலை செய்து வருகின்றானாம்.
பெளசி என்ற அந்த பெண் பாடசாலைக்கு சென்று வரும் வழியில் பார்த்து காதல் வந்ததாகவும்.அவளிடம் அதை வெளிப்படுத்திய போது அதை அவள் மறுத்துவிட்டாளாம் ஆனால் அவளை மறக்கவும் முடியாமல் ஊருக்கு போகவும் முடியாமல் நடைபிணமாக வாழ்ந்து வந்திருக்கின்றான். அதன் பிறகு அவள் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் போராட்டத்தில் இனைந்துவிட்டதாகவும். அதன் பிறகு சில தடவைகள் அவளை போராளியாக கண்டு கதைத்த போதும் இவன் அதே பழைய காதலுடன் அவளிடம் மீண்டும் கேட்ட போதும் அவள் மறுத்துவிட்டாளம் அதன் பிறகு ஆறுமாதம் கழித்து அவள் மண்ணுக்காக மரணித்துவிட்ட செய்திதான் தனக்கு கிடைத்ததாகவும். இன்று அவளை வித்துடலாக பார்பதாகவும் சொல்லி அழுதான். சரி அழாதீங்க அண்ணா இது எங்கள் மண்ணின் சாபம் என்று அவனை தேற்றிவிட்டு வந்துவிட்டேன் அதன் பிறகு அந்த அண்ணாவை எங்கும் சந்தித்ததில்லை
ஒரு ஆறுமாதம் கழித்து ஈழநாதம் பத்திரிக்கையில் வந்திருந்த வீரச்சாவு அறிவித்தல்களை பார்த்துக்கொண்டிருந்த போது அதில் ஒரு முகம் எங்கோ பார்த்த ஞாபகமாக இருந்தது உற்றுப்பார்தேன்.ஆம் அது அந்த அண்ணாதான். கீழே கொடுக்கப்பட்டிருந்த குறிப்பில் பார்த்தேன் நிசாந்தன் என்று அவர் பெயர் குறிப்பிடப்படடிருந்து மன்னார் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்து.அவரது வித்துடல் தேராவீல் மாவீரர் துயிலிம் இல்லத்தில் விதைக்கபட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டியிருந்தது.
அவரது பெளசி வீரமரணம் அடைந்த அதே களமுனையில் நிசாந்தன் அண்ணாவும் வீரமரணம். பெளசி அக்காவின் வித்துடல் விதைக்கப்பட்ட அதே தேராவில் துயிலும் இல்லத்தில் அந்த அண்ணாவின் வித்துடலும் விதைக்கப்பட்டிருக்கின்றது.
காதல் எப்போதும் புரிந்துகொள்ள முடியாத ஒரு உன்னத புனிதம் பெளசி அக்காவுக்கு மண்மீது காதல் நிசாந்தன் அண்ணாவுக்கு பெளசி அக்கா மீது காதல் அந்தக்காதல் தான் அவரையும் மண்மீது நேசம் கொள்ள வைத்திருக்கின்றது.அதுவும் காதலில் ஒரு தலைக்காதல்கள் தான் நேசித்தலின் அதி உச்சம் என்பதற்கு நிசாந்தன் அண்ணா சாட்சி.
தெரிந்த சனம் தெரியாத கதைகள்(தொடரும்)