திருகோணமலையில் எனது சம காலத்தில் வேறு திணைக்களம் ஒன்றில் கடமையாற்றிய நண்பர் ஒருவரை நேற்று நீண்ட நாள்களுக்குப் பின்னர் கண்டேன்.
வீட்டு நடப்பு, நாட்டு நடப்பு , முடிய அலுவலக நடப்பு பற்றி கதை திரும்பியது .
அவர் சொன்னார் அங்க திருகோணமலையில் சீனா , மூனா உள்ள அலுவலகத்தில் சந்தோசமாக வேலை செய்தோம்.
இங்க வந்து தானா உள்ள அலுவலகத்தில வேலை செய்ய ஏலாமல் கிடக்குது என்றார்.
ஏன் ? எனக் கேட்டேன்.
பெரியவர்களுக்கு போட்டுக் கொடுத்தல் ,காட்டிக் கொடுத்தல் ,வாளி வைத்தல் ஆகியவற்றால் வேலை செய்யக் கஸ்டமாகவும் மனசஞ்சலமாகவும் உள்ளது.
சீனா ,மூனாவிடம் காட்டிக் கொடுக்கும் பழக்கம் இல்லை . ஏன் எங்கட ஆக்களிட்ட மட்டும் இந்த காட்டிக் கொடுக்கும் பழக்கம் வந்தது என்றார்.
எங்களிட்ட தான் நீண்ட பாரம்பரியம் உள்ளது. கட்டப்பொம்மனுக்கு ஓர் எட்டப்பன்,
பண்டாரவன்னியனுக்கு ஓர் காக்கைவன்னியன்.
பி—————— க்கு ஓர் க————–
இப்படியே நீளும் வரலாற்றில் காட்டிக் கொடுத்து தம்மை அழித்த இனமல்லவா எமது இனம் என்றேன்.
விதி விலக்காக நேர்மையாக நிர்வாகம் நடத்தும் அதிகாரிகளும் உள்ளனர்.
முழுவரையும் குறைத்து கூறக் கூடாது என்றேன்.
பிற்குறிப்பு- சீனா – சிங்களவர், மூனா – முஸ்லீம் , தானா – தமிழர்