ஏனடா தமிழா
நீ திருந்தமாட்டாயோ
கொத்துக்கொத்தாய்
கொத்துக்குண்டடிச்சு
கொண்டவனுக்கு
கும்பம் வைத்தா வரவேற்கிறாய்
நீங்கலெல்லாம்
எம் தமிழினத்துக்கு
சாபக்கேடாய் வாழ்வதைவிட
மகிந்தகூலிப்படை
அடித்த கொத்துக்குண்டில்
செத்துப்போயிருக்கலாம்
உணர்வற்ற ஜடங்களே
காணமல் போன எம்
உறவுகளைதேடி
மழை வெய்யிலென்னு பாராது
வீதீயோரங்களில் அழும்
உறவுகளுக்கு ஆதரவாய்
இப்படியொரு கூட்டம் இதுவரை
எட்டிப்பார்த்ததில்லையே
உங்களுள் ஓடுவது
எம் இனத்தின் குறுதிதான
சந்தேகம் எழுகிறது எனக்கு
உங்கள் எண்ணம்தான் என்ன
வாய்க்கருசி போட்டவனை
வாசலுக்கு அழைத்து விருந்துவைப்பதா
போக்கத்தவர்களே போங்கள்
அவன் பின்னால் போங்கள்
சதிசெய்தே சாம்பலாக்குவான்
சமாதி கட்ட உங்களுக்கு
நிலமும் இல்லாது போகும்
போக்கத்தவர்களே போங்கள்
காறி உங்கள் முகத்தில்
உமிழ வேண்டும்போல் உள்ளது
வெக்கங்கெட்டவர்களே
உணரமாட்டீர்களா
எம் உறவுகின் தியாகங்களை
நாம் தன்மானத்தோடு வாழ
நஞ்சுமாலை கழுத்தில் அணிந்து
களத்தில் நின்று
தங்கள் இன்னுயிர்களை
தியாகம்செய்த
ஒவ்வெரு உயிர்களையும்
எண்ணிப்பாருங்கள்
ஆத்திரத்தோடு
அழுகையும் வருகிறது
நீங்கள் திருந்தமாட்டீர்களா..?
கொஞ்சமும் வருந்தமாட்டீர்களா.?
முள்ளிவாய்க்கால் மறந்துபோனீர்களா..?
தமிழன் தன்மானம்
உள்ளவனென
உலகு அறிய
திருந்துங்கள் வருந்துங்கள்
எம் ஒற்றுமையை நிலை நாட்டுங்கள்.
– மன்னார் பெனில்.