2001ம் வருடம் அப்போது ஆனைவிழுந்தான் என்ற ஊரில் இடம்பெயர்ந்து இருந்தோம்
ஈழப்போரியல் வரலாற்றில் மிகப்பெரிய யுத்தங்களில் ஒன்றான ஜெயசிக்குரு என்ற மாபெரும் யுத்தம் ஒய்ந்த பின்னரான ஒரு இடைவெளி
சமாதான தேவதையாக தன்னை உருவகித்துக்கொண்ட சந்திரிக்கா அவர்கள் தன் உண்மையான முகத்தை காட்டிக்கொண்டு இருந்த உச்ச கட்டம் தெரு எங்கும் மரண ஒலம்.யுத்தம் பலி எடுக்கும் உயிர்கள். பசி பட்டினி பலி எடுக்கும் உயிர்கள் என்று அழிவின் விழிம்பில் எம் மக்கள் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டியிருந்த நேரம்.
அப்போது பதினோரு வயசு சிறுவனான பாடசாலை செல்லுதல் பின்னேரங்களில் கிரிக்கெட் விளையாடுதல் என்றேன் நாட்கள் நகர்ந்தன.இபோது பதினோரு வயதில் இருக்கும் ஒரு சராசரி சிறுவர்கள் அனுபவிக்கும் எந்த சந்தோசங்களையும் வருமையும் யுத்தமும் எங்களுக்கு பரிசளிக்கவில்லை. எங்கள் சந்தோசங்கள் முழுமையாக முடக்கிவிடப்பட்டிருந்தது.
வேலைக்கு போன அப்பா உயிருடன் வீடு திரும்பினால்தான் சாப்பாடு அதுவரை அம்மாவும் நானும் அழுதுட்டே இருப்போம் அப்பா பத்திரமாக எந்த செல்லடி விமான குண்டு வீச்சில் சிக்கிவிடாமல் வீடுவந்து சேர வேண்டும் என்று. அப்பாவுக்கும் அதே கவலை தனக்கு ஒன்று நேர்ந்தால் பிள்ளைகள் தவித்துபோய்விடுவார்கள் எனறு. இப்படித்தான் எங்கள் மண்ணில் ஒவ்வொரு கூடும்பத்தின் நிலையியும். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வலிகள் அவை
இந்த நெருக்கடியான காலத்தில் ஒரு நாள் பாடசாலை இடைவேளையில் எதிரே இருந்த கடைசில் ஜந்து ரூபாய்க்கு ஒரு கல்பணிஸ் வேண்டு நாங்கள் மூன்று பேர் அதை பகிர்ந்து உண்ண தயார் ஆனபோது. ஒரு வயதான அய்யாவும் ஒரு வயதான அம்மாவும் எங்களை நோக்கி வந்து.சாப்பிட்டு இரண்டு நாள் ஆகிவிட்டது என்று கையை நீட்டினார்கள். இருப்பது ஒரு கல்பணில் ஏற்கனவே நாங்கள் நண்பர்கள் மூன்று பேர் அதை பகிர்ந்து உண்ண இருக்கின்றோம் இதில் இவர்கள் இருவர் வேறு.என்ன செய்வது என்று தெரியாமல் ஆளை ஆள் பார்த்தோம் வேறு காசும் இல்லை எங்களிடம். இல்லை. ஒரு நில நொடிகளில் அந்த கல்பணிசை அந்த அய்யாவிடமும்,அம்மாவிடமும் கொடுத்துவிட்டு நீங்க சாப்பிடுங்க என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
கல்பணிசை வாங்கிய ஜயா தம்பி நில்லுங்க என்று அதில் பாதியை உடைத்து எங்களிடம் தந்தார். பாதி போதும் தம்பி. நீங்களும் பசியா இருப்பீங்க பாதியை சாப்பிடுங்க என்று.
பாதியை அந்த அம்மாவுக்கு சாப்பிடக்கொடுத்தார் நான் பசிதாங்குவன் தம்பி இவள் தாங்க மாட்டா என்று சொல்லியவாரு அந்த அம்மாவின் தலையை வருடிவிட்டார். எத்தனை புனிதமான நேசிப்பு இது இதுதானே நிஜமான காதல் வயதான காலத்திலும் வாலிபம் போன பிறகும் தன் மனைவி மீதான அந்த ஜயாவின் நேசம் காதலில் நிஜ பரிமாணம்.
அந்த ஜயா எங்களிடம் தந்த பாதி கல்பணிசை மீண்டும் அவருடம் கொடுத்துத்தோம் இல்லை வேண்டாம் நீங்க சாப்பிடுங்க என்றார்
இல்லை ஜயா நாங்கள் ஏற்கனவே நன்றாக சாப்பிட்டுவிட்டோம் நீங்க சாப்பிடுங்க என்று பாதி கல்பணிஸ்சையும் அவரிடமே கொடுத்துவிட்டு பாடசாலை நோக்கி நகர்ந்தோம்.
ஆனால் நான் ஒரு நாளாகவும்,என்னுடன் வந்த நண்பர்கள் இரண்டு நாட்களாகவும் சாப்பிடவில்லை என்பதை அந்த அய்யா அறிந்திருக்க நியாயமில்லை.
தெரிந்த சனம் தெரியாத கதைகள்(தொடரும்)
– கே.எஸ்.எஸ். ராஜ்.