இலங்கையின் 70 ஆவது சுதந்திரதின நாளில் தமிழிழனத்திற்கு நீதி கோரி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மக்களைப் பார்த்து கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தை சேர்ந்த இராணுவ அதிகாரியான பிரியங்க பெர்னாண்டோ என்பவர் உங்களை கழுத்து வெட்டி கொல்ல வேண்டுமென்று சைகை மூலம் காட்டியமை காணொளி ஆதாரமாக வெளிவந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.