சிங்களத்தில் மாகாண சபை என்பதற்கு පලාත් සභා பலாத் சபா எனும் சொல் பாவிக்கப்படுகிறது.
அதே வேளை உள்ளுராட்சி சபை என்பதற்கு පලාත් පාලන பலாத் பாலன எனும் சொல் பாவிக்கப்படுகிறது..
ஆனால் தமிழில் இவ்விதம் ஒரு சொல்லின் முதல் அடிகள் வேறு கருத்து தருவதாக யான் அறியவில்லை.
சிங்கள மொழியில் இது ஒரு விசித்திரமானது. தமிழில் எத்தனை எழுத்துகள் உள்ளன எனக் கேட்டால் 247 எனப் பட்டெனக் கூறி விடுவார்கள்.
ஆனால் சிங்களத்தில் யோசித்து விட்டு 302 எனக் கூறுவார்கள்.
சிங்கள மொழியில் உள்ள ஒரு beauty என்னவென்றால் சகல பிறமொழிச் சொற்களின் உச்சரிப்புக்கும் ஒவ்வொரு எழுத்தை வைத்துள்ளனர்.
ச,ஸ. போன்ற எழுத்துகளுக்கும் , ப,ba போன்றவற்றுக்கு பல எழுத்துகளை வைத்துள்ளனர். .
தேவை ஆயின் புதிய எழுத்துகளை உச்சரிப்பிற்காக உருவாக்குவதில் பின்னிற்க மாட்டார்கள்.
மாற்றங்களை எப்போதும் இலகுவாக உள்வாங்கிக் கொள்ளுவார்கள்.
இது அவர்களது மொழிக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி உலகின் நவீன போக்குக்கு ஏற்ப தாமும் இசைந்து கொடுத்து வளர்வதாக கூறுவார்கள்.
தமிழ் மொழி இப்படி வளைந்து கொடுக்காமையால் உலகின் நவீன போக்கிற்கு ஏற்ப உச்சரிப்பு மாற்றங்களை காண முடியாது உள்ளமை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பலவீன நிலை என்போரும் உள்ளனர்.
சிங்களத்தில் மாவட்டம் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள District என்பதை அப்படியே தமது நாக்கு வளைவிற்கு ஏற்ப திஸ்திரிக்கய என்ற சொல்லாக்கி விட்டனர்.
இப்படியே பல ஆங்கில பிறமொழிச் சொற்கள் அப்படியே சிங்களச் சொற்களாக உள்வந்து விடும்.
ஆனால் எம்மவரோ மிகவும் கஸ்ரப்பட்டு கீச்சகம் twitter போன்ற சொற்களை உருவாக்கி விடுவார்கள்.
ஆட்டு உருளை,மாட்டு உருளை போன்ற சுவாரஸ்யமான மொழி பெயர்ப்பு கதைகளும் உள்ளது. அதை தனியான பதிவில் பார்ப்போம்.
இந்தியா போன்ற நாடு ஒன்றில் நாம் பிறந்து இருந்தால் ஆறு ஏழு மொழிகளை கற்றிருக்கலாம்.
துரதிஸ்டவசமாக இங்கு பிறந்து ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தெரிந்து கொண்டது எமது துரதிஸ்டம் தான்.
சிங்களத்தில் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களை சிங்களமாக்கினார்கள்.
ஆனால் அவர்கள் பார்வையில் முக்கியமான ஒன்றுக்கு ත්රස්තවාදීන්ගෙන් திரஸ்தவாதின்கென் என்ற சிங்கள மொழிச் சொல் வைத்துள்ளனர். அதன் தமிழ் கருத்து?
பிற்குறிப்பு – சிங்கள சொற்களை அனுப்பி வைத்த எனது நண்பருக்கு நன்றிகள் பல.