வடக்கில் கட்டப்படவுள்ள 6 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டுவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த வீட்டிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த போதும் குறித்த வீட்டினை கட்டுதவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என இன்று முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
அத்துடன், 6 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளதென்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கொழும்பில் உள்ள எனது வீட்டில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தொடர்ந்தம் அவர் தெரிவிக்கையில்,
எமது மாகாண மக்களுடன் கலந்துரையாடாமல் இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது எமது மாகாண மக்களை புறக்கணிக்கும் செயல் என சுட்டிக் காட்டினேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோர் தமது மக்களுக்கு உடனடியாக வீடுகள் தேவையாக இருக்கின்றதென கேட்கின்றார்கள்.
எனவே, அவர்களுக்காக இந்த வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கின்றது என்றார்.
3 அல்லது நான்கு இடங்களில் இருந்து வீடுகள் எவ்வாறு கட்டப்பட வேண்டுமென்ற திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த திட்டங்களை பரிசீலனை செய்து முடிவுக்கு வர வேண்டுமே தவிர, தான்தோன்றித் தனமாக தீர்மானங்களை எடுப்பது முறையாகாது என சுட்டிக்காட்டினேன்.
அமைச்சரவையின் கட்டளையையே நான் நடைமுறைப்படுத்துவதாக சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
மேலும், எமது அமைச்சர்களுடன் கலந்துரையாடி விட்டு இவ்வாறான தான் தோன்றித்தனமாக கட்டப்படும் வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என அமைச்சர் சுவாமிநாதனுக்கு தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.