அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 2012_ம்ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவந்த திரு சாந்தரூபன் தங்கலிங்கம் என்பவரது புகலிடக்கோரிக்கை கடந்த 2015_ம் ஆண்டு அவுஸ்திரேலியா அரசினால் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சமஸ்ட்டி நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டு குறித்த நபர் குடிவரவுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னர் பேர்த்திலும் பின்னர் மெல்பேர்ணிலுமாக குடிவரவத்தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இவரை நாடுகடத்துவதற்கான அறிவித்தல்க்கடிதம் அதிகாரிகளினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பெப்ரவரி 22ம்திகதி கவனயீர்ப்புப்போராட்டம்
குறித்த நபர் நீண்டகாலமாக விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக அங்கம் வகித்தவர். பலசந்தர்ப்பங்களில் விழுப்புண் அடைந்தவர். விழுப்புண்பட்டதில் தற்போதும் ஒருகால் இயலாதநிலையிலேயே உள்ளார்.
இவர் நாடுகடத்தப்படும்பட்சத்தில் இவரை இல்லை அரசு கைதுசெய்து சிறையில் அடைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்துவார்கள் என்பது உறுதியானது. எனவே இவரதும் இவருடன் நாடுகடத்தப்படவிருக்கும் மற்றைய தமிழர்களதும் நாடுகடத்தல் உத்தரவை தடுக்கும்முகமாக டன்டினோங்கில் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப்போராட்டம் நடைளெறவுள்ளது. எனவே இந்த கவனயீர்ப்புப்போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு ஈழத்தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக குரல்கொடுக்க அணிதிரளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்: Dandining plaza. McCrae street.
காலம்: 11_02_2018. ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 2.00 மணிமுதல் 4.00மணிவரை.
மேலதிக தொடர்புகளுக்கு: 0452 205 399.
நன்றி
தமிழ் ஏதிலிகள் கழகம்.
அவுஸ்திரேலியா.