துயரம் சுமந்த விழிகளும்
துக்கம் நிறைந்த இதயமும்
துணையாக நிழல் தேடி
தூய உள்ளம் நாடி அலைந்திடும் !
துரோகக் கரை படிந்த
நட்பு வேடம் அணிந்த
நடிப்பு மனிதரின்
நாடக அரங்கேற்றம் …
துன்பத்தில் தள்ளிவிட்டு
துடிப்பது கண்டு
இன்பம் சுகிக்கும்
வஞ்சக நெஞ்சங்கள் …
பார்க்கும் இடமெல்லாம்
பழங்கள் நிறைந்து
பரந்து காணப்படும்
நச்சு விருட்சமாக மனிதம் …
பசி தான் தீர்த்திடுமா ?
நிழல் தான் வழங்கிடுமா ?
காய்ந்து சருகாகி
ஒற்றை நம்பிக்கைத் துளிக்காக
மரத்தோடு ஒட்டியிருக்கும்
இளம் குருத்தாக உள்ளம் !
பாலை வனமாக
தீயாய் சுட்டெரிக்கும்
பாவப்பட்ட பூமியிலே …
பாசத்தை சுமந்தபடி ,
பாச நெஞ்சங்களின் துணை தேடி …
நிழலுக்காக காத்துக்கிடக்கும் உள்ளம் !
– வேலணையூர் ரஜிந்தன்.