பாலாவின் படங்களில் எப்போதுமே – அவை ஒரே மாதிரியாக இஎருந்தாலும் – சில மறக்க முடியாத கேரக்டர்கள் இருக்கும். அதைப் போல சில கேரக்டர்களை இந்தப் படத்திலும் காணலாம். குறிப்பாக ‘நாச்சியார்’ என்ற ‘ஜோ’ ஏற்று நடித்திருக்கும் கேரகடர்.
ஆது என்ன கேரக்டர்?
சில காம கொடூரன்களைப் பற்றிய பாலியல் வன்கொடுமைச் செய்திகளை ஊடகங்களில் பார்க்கும் போது நாம் ஒரு சாமாணியனாக மாறி விடுகிறோம். “எங் கையில மட்டு கெடைச்சான்…..” என்று அவனுக்கு வினோதமான தண்டணைகளை எல்லாம் நமது மனம் பரிந்துரை செய்கிறது. அதே போல ஒரு காவல்துறை அதிகாரி ரத்தமும் சதையுமாக இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் நாச்சியார் கேரகடர்.
‘கேரக்டர் கெத்து” என்றால் என்ன என்பதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார், ஜோதிகா. ஒரு தலை சிறந்த நடிகையால்தான் இப்படி நிகழ்த்த முடியும்.
நாச்சியாரை உடம்பில் மட்டும் கொண்டு வரவில்லை. உள்ளத்திலும் உணர்விலும் கொண்டு வந்திருக்கிறார்.
.
ஆர்டிஸ்ட்டுகளிடம் வேலை வாங்குவதில் சளைத்தவர் அல்ல பாலா. இவரிடம் வந்தாலே பலர் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
பாமக வின் தலைவர் ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் சிவனாண்டி என்ற சிறு ரோலில் வருகிறார். நல்ல முகம். நன்கு பொருந்துகிறார். ஆனால் அவரது கேரக்டர் மொக்கையாக விடப்பட்டுள்ளது.
இவானா என்ற பெண் ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வருகிறார். நல்ல முகம். நிறைய ஆனால் அளவான எக்ஷ்பிரஷன்களை வெளிப்படுத்துகிறார். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் பிடித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.
ஜிவி பிரகாஷ் அச்சு அசலாக தனது கேரக்டரை நிறுவி இருக்கிறார். ஆனால் இந்தக் கேரக்டரை ஏற்றதால் அவருக்கு எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை. ஏனென்றால் பாலாவின் கூவம் என்கிற குட்டையில் இருந்து வந்திருக்கிற பத்தாயிரத்து பதினோராவது கலீஜ் இது.
பாலாவைப் பற்றிக் கூற வேண்டுமானால்,
“திரு.பாலா! இனி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வழியைப் பாருங்கள். ஒரு நல்ல ரைட்டரிடம் கதையை வாங்குங்கள்; நல்ல வசன கர்த்தாவிடம் வேலையை வாங்குங்கள்; உங்கள் குழுவை அந்த கான்செப்ட்டில் இறக்குங்கள்; உங்கள் இயக்குநர் திறன் இன்னும் மங்கிப் போக வில்லை. இப்போது கூட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் இதுவரை செய்திராத இலக்கியதரமான ஒரு சினிமாவை பார்வையாளனுக்குக் கொடுக்கும் உங்களது பொறுப்பை செய்து காட்டுங்கள்”
பாடல்கள் பற்றி எந்த நினைவும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே இடிபோன்ற பலத்த சத்தத்துடன்தான் படம் துவங்குகிறது. சத்தம்தான் தனது பலம் என்று பாலா நம்புகிறாரா?
ஆனால்,
இளையராஜா மீண்டும் ஒரு நவீன வடிவத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு பின்னணி இசைக் கோர்ப்பு சவால் விடுக்கிறது. அவரை பின்னுக்குத் தள்ள எவராலும் முடியாது போலிருக்கிறது. அசத்தி இருக்கிறார், பத்மவிபூஷன்.
எனக்கு இந்தப் படத்தில் பிடித்து இருந்த ஒரு விஷயம் அதன் கதைதான். ‘ஒரு சாதாரண வழக்கை எதிர்கொள்ளும் அசாதாரண காவல் அதிகாரி’ என் கிற அந்த ஒருவரிக் கதைக் குறிப்பில் பெரிய கேரக்டர்களை வெளிகொண்டு வந்திருக்கும் திறன் ரசிக்கத் தக்க ஒன்று.
மற்றபடி
இது ஒரு பாலாவின் கிறுக்கல் ஓவியம்தான்!